புத்தரின் பொன்மொழிகள் #1
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை. – கௌதம புத்தர் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும். – கௌதம புத்தர் தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும். – கௌதம புத்தர் பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. அன்பினால் மட்டுமே பகைமையை தணிக்க முடியும். – கௌதம புத்தர் வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும் தீங்கைவிட, ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும். – கௌதம புத்தர் தன்னைவிட மேலான அல்லது தன்னைப் போன்ற அறிவுள்ள நண்பர்களை ஒருவன் அடைய முடியாவிட்டால் அவன் தனந்தனியே உறுதியாகச் செல்லட்டும் , மனம் பண்படாத மனிதர்களிடமிருந்து உதவி கிடைக்காது. – கௌதம புத்தர் மற்றவர்களின் குற்றங்களை மற்றவர்கள் செய்தது பற்றியும் அவர்கள் செய்யாததைப்பற்றியும் கவலைப் படாமல், தான் என்ன செய்யப்...