ஔவையாரின் தத்துவங்கள் - பொன்மொழிகள் #5


ஆறு வரும் வழியில் உண்டாக்கும் மேடும் பள்ளம் போல, நம்முடைய செல்வம் ஒருநாள் அதிகமாகும் அல்லது குறையும். பூமியில் வாழும் மனிதர்களே இதை உணர்ந்து உங்களிடம் செல்வம் இருக்கும் போதே பசி என்று வந்தவருக்கு அன்னம் இடுங்கள், தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள், நீங்கள் செய்த தர்மம் உங்களின் தலை காக்கும், அதுவே உங்கள் உயிர் உயரும் உபாயம் ஆகும். -ஔவையார்



பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம். -ஔவையார்
 

பூ பூக்காமல் காய்க்கும் மரங்கள் உள்ளன, அது போல் ஏவல் செய்வதற்கு முன் , குறிப்பறிந்து வேலை செய்யும் வேலைக்காரர்களும் உள்ளனர். இதற்கு மாறாக, தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகள் உள்ளன. அது போல் மூடர்களுக்கு எத்தனை உரைத்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.
- ஔவையார்
 

நண்டு, முத்துச்சிப்பி, மூங்கில், வாழை அது அழியும் காலம் வந்தவுடன் கன்று ஈனும். கன்று வருவதை வைத்து இது அழியும் காலம் வந்து விட்டது என்று அறியலாம். அது போல் ஒருவனுக்கு கல்வி, பதவி, பண்பு, பெயர், புகழ், செல்வம் ஆகியவை அழியும் வேளை வருவதை அவர் பிறர் மனையை பார்க்கத் தொடங்கியதில் இருந்து நாம் அறியலாம்.- ஔவையார்

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்

Comments

Popular posts from this blog

ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1

#2 கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள்.karl marx quotes in tamil

திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #1